சென்னை: திமு தலைவர் மு.க.ஸ்டாலின் 33 அமைச்சர்களுடன்  நாளை காலை 9 மணிக்கு முதல்வராக பதவி ஏற்கிறார். கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெறுகிறது.

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றிபெற்றுள்ள திமுக, தமிழக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து திமுக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து நாளை காலை மு.க.ஸ்டாலின் தலைமையிலான 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பதவி ஏற்கிறது.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளயஅழைப்பிதழில்,

தமிழ்நாடு அமைச்சரவை பதவி ஏற்பு விழா 2021ம் ஆண்டு மே திங்கள் 7ம் நாள் வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெறும்.  தாங்கள் வருகை தந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.

7ந்தேதி காலை 9மணிக்கு தமிழக முதல்வராக பதவி ஏற்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..

ஸ்டாலின் உள்பட நாளை பதவி ஏற்கும் 34 பேர் கொண்ட திமுக அமைச்சரவை பட்டியல் – முழு விவரம்!