மக்களின் மனதை வென்றுள்ள ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டாம் : ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை

க்களின் மனதை வென்றுள்ளதால் ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியை சந்தித்துள்ளது. அதற்கு பொறுப்பு ஏற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் செயற்குழுவில் அறிவித்தார். ஆனல் காங்கிரஸ் செயற்குழு தற்போதைய நிலையில் கட்சிக்கு சரியான தலைமை இல்லாததால் ராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க மறுத்துள்ளது.

இது குறித்து இன்று காங்கிரசின் தமிழக கூட்டணி கட்சியான திமுக தலைவர் மு க ச்ஆலின் ராகுல் காந்தியிடம் பேசி உள்ளார். அப்போது அவர், “காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்த போதிலும் நீங்கள் மக்களின் மனதை வென்றுள்ளீர்கள். இதனால் ராஜினாமா செய்ய வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவருடைய தாயார் சோனியா காந்தி ஆக்யோர் மு க ஸ்டாலினுக்கு அப்போது தமிழ்நாட்டில் திமுக வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி