உரத் தட்டுபாட்டை போக்க அவசர நடவடிக்கை மேற்கொள்க: மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்

உரத் தட்டுப்பாட்டை போக்குவதற்கு அவசர நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ள அவர், “தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டால், விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள். மத்திய – மாநில அரசுகள் அலட்சியப் போக்கினைக் கைவிட்டு உரத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் !” என்று தெரிவித்துள்ளார்.