இன்று மாலை ஆளுநரை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை:

மிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இருவரும் சிறிது நேரம் தனியாக பேசிக்கொண்டிருந்தனர். இதன் காரணமாக தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில், பேனர் கலாச்சாரம் காரணமாக சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரணத்தை எய்துள்ள நிலையிலும், அமித்ஷாவின் இந்தி திணிப்பு பேச்சும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது,. இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம்  நடைபெறும் சூழல் உருவாகி உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க  திமுக தலைவர் ஸ்டாலின் நேரம் கேட்டிருந்தார். அதைத்தொடர்ந்து இன்று மாலை ஸ்டாலின் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து இன்று மாலை கவர்னர் மாளிகை சென்ற மு.க.ஸ்டாலின் கவர்னர் பன்வாரில் புரோகித்தை சந்தித்து பேசினார். இதையடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.