பேடித்தனம்: சபாநாயகர் மீது மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

சென்னை,

டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது பேடித்தனம் என்று சபாநாயகர் தனபாலை, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின் தெரிவித்தாவது: “எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகரும், முதல்வகும் கூட்டு சேர்ந்து ஜனநாயகப் படுகொலையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போதுள்ள அசாதாரண அரசியல் நெருக்கடிக்கு மத்திய அரசும், ஆளுநர் வித்யாசாகர் ராவும் முழு பொறுப்பேற்க வேண்டும். குறுக்கு வழியில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முயற்சிக்கும் எடப்பாடி அரசு மக்கள் மன்றத்தில் நிச்சயமாக தோற்கடிக்கப்படும்.

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில் எம்.எல்.ஏ.க்களை நீக்கிவிட்டால் தப்பித்து விடலாம் என இதுபோன்று பேடித்தனமாக முடிவெடுத்துள்ளனர்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி