சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அன்பழகனிடம் மு.க.ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு

சென்னை:

டல்நலம் இல்லாமல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவரை திமுக தலைவர் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

திமுக வின் முன்னணி மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பழகன் அக்கட்சியின் பொதுச் செயலாளர்  பதவி வகித்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக கடந்த 20ந்தேதி  உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை  அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பி ஓய்வெடுத்து வருகிறார்.

இந்த நிலையில், அன்பழகன் வீட்டிற்கு நேரில் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். அவர் நலமோடு நீண்ட காலம் வாழ வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.