எம்எல்ஏ தொகுதி மேம்பாடு நிதி ரூ 3 கோடியாக உயர்வு! எதிர்க்கட்சியினரை குளிர வைத்த எடப்பாடி

சென்னை:

மிழக சட்டமன்றத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாடு நிதி ரூ. 2.5 கோடியிலிருந்து ரூ.3 கோடியாக உயர்த்துவதாக அறிவித்தார். இதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலத்த வரவேற்பு தெரிவித்தனர்.

தமிழக சட்டமன்ற மானியக் கோரிக்கை  கூட்டத் தொடர் கடந்த ஜூன் 28-ம் தேதி தொடங்கி நேற்றுடன் (ஜூலை 19ந்தேதி)   முடிவடைந்தது.    கடைசி தினமான நேற்று சட்டசபையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  எம்எல்ஏக்களின் கோரிக்கையான  தொகுதி மேம்பாட்டு நிதி, தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ 2.5 கோடியுடன் ரூ 50 லட்சம் சேர்த்து, ரூ 3 கோடியாக வழங்கப்படும் என அறிவித்தார்.

இதற்கு அதிமுக மட்டுமின்றி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வரவேற்றனர்.

கார்ட்டூன் கேலரி