சென்னை:

மிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச் சாமியை கருணாஸ் எம்எல்ஏ தலைமை செயலகத்தில் திடீரென சந்தித்து பேசினார்.

அரசு, காவல்துறை  மற்றும் சமுதாயம் குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ் ஜாமினில் உள்ளார்.இந்த நிலையில் கைதுக்குப் பிறகு முதல்முதலாக முதல்வரை  தலைமைச்செயலகத்தில் சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

எடப்பாடியை சந்தித்த கருணாஸ்  முதல்வருக்கு  தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரி வித்துக்கொண்டதாக கூறப்பட்டு. மேலும்  தனது தொகுதிக்கான கோரிக்கை மனுவை வழங்கியதாகவும், அப்போது மருதுபாண்டியர் சிலை அமைக்க  கோரியதாவும்  வெளியாகி உள்ளது.

ஆனால், தனது மீதுள்ள கேஸ் விஷயமாக பேசியதாகவும், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், தானும் பதவி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதால், அரசுக்கு ஆதரவாக செயல்படும் விதமாகவும் சந்தித்து  பேசியதாகவும் கோட்டை வட்டார தகவல்கள் கசிகின்றன.

இந்த சந்திப்பின்போது  தமிழக  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடனிருந்தார்.