கருணாஸ் மருத்துவமனையில் அனுமதி

மீபத்தில் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த எம்எல்ஏ கருணாஸ் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரியை அவதூறாகப் பேசியதாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ் பிறகு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில் இந்று அதிகாலை முதலே   கருணாஸின் வீட்டைச் சுற்றி விடிய விடிய நெல்லை போலீசார் கண்காணித்தனர்.   இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகின.

நெல்லையில் கடந்த 2017-ம் வருடம் தேவர் பேரவையைச்  சேர்ந்த முத்தையாவின் காரை சேதப்படுத்திய வழக்கு தொடர்பாக கருணாஸிடம் விசாரணை நடத்த நெல்லை காவல்துறையினர் சென்னை வந்துள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் உடல்நலக் குறைவால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன் வள்ளுவர்கோட்டத்தில் கூட்டத்தில் பேசிய கருணாஸ், முதல்வர் மற்றும் காவல் அதிகாரி ஒருவரை அவதூறாகப்பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அன்றைய பேச்சின்போது, “கைதுக்கு நான் பயப்படமாட்டேன்.. சிறை செல்ல தயாராக இருக்கிறேன்” என்று கருணாஸ் பேசியது குறிப்பிடத்தக்கது.