எடப்பாடி பழனிச்சாமி – கருணாஸ் திடீர் சந்திப்பு

சென்னை

டிகரும் திருவாடனை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் இன்று திடீரென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் கருணாஸ் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.   ஜெயலலிதா மறைவுக்குப் பின் இவர் சசிகலா மற்றும் தினக்ரன் அணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.   அதன் பிறகு சசிகலா அணியால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தன்க்கு எதிரான ஓ பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்தார்

அப்போது முதல் கருணாஸ் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்து வந்தார்.   அத்துடன் அந்த அணியை மிகவும் தாக்கி பேசி வந்தார்.   இன்று தலைமை செயலகத்தில் திடீரென எடப்பாடி பழனிச்சாமியை கருணாஸ் சந்தித்து பேசினார்.   இந்த நிகழ்வு அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கருணாஸ் ஏற்கனவே தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்திருந்தார்.    அதனை இன்று திரும்ப பெற்றுள்ளது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

இது குறித்து கருணாஸ், “நான் தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பழனிச்சாமியை சந்திக்கவில்லை.   எனது தொகுதியான திருவாடனையில் உள்ள கண்மாய்களை தூர் வாருவது குறித்து கோரிக்கை வைக்க முதல்வரை சந்தித்து பேசினேன்.   சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடையும் என்பதால் அதை திரும்ப பெற்றுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி