கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எம்எல்ஏ கருணாஸ் குணமடைந்தார்…

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கருணாஸ் எம்.எல்.ஏ. குணமடைந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் 10 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு, நோய் தொற்று குணமடைந்த நிலையில், இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாம் குணமடைய உதவிய மருத்துவர், செவிலியர் உள்ளிட்டோருக்கும் அரசுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக  தெரிவித்துள்ளார்.