சபரிமலை விவகாரத்தால் கேரள சட்டப்பேரவையில் தொடரும் அமளி

--

திருவனந்தபுரம்

கேரள சட்டப்பேரவையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக தொடர்ந்து 4 நாட்களாக அமளி ஏற்பட்டு வருகிறது.

நீண்ட நாட்கள் வழக்கமாக உள்ள சபரிமலையில் இளம்பெண்கள் அனுமதிக்காததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த் வழக்கில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த ஏற்படுகளை செய்து வருகிறது. அதே நேரத்தில் பக்தர்கள் பலர் தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளனர்.

சபரிமலை விவகாரம் சட்டப்பேரவைக் கூட்டத்தில் ப்ரும் தாக்கத்தை உண்டாக்கி உள்ளது. நேற்று 4 ஆது நாளாக அமளி நடந்ததால் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. அத்துடன் பேரவை வளாகத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் சிலர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இது குறித்து அமளியை நடத்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, “சட்டப்பேரவையை நடத்த விடாமல் முதல்வர் அனைத்து உறுப்பினர்களையும் தூண்டி விட்டுள்ளார். சபரிமலை பகுதிக்ளில் 144 உத்தரவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை குறித்து உறுப்பினர்களை பேசவே அனுமதிக்கவில்லை. அதனால் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

You may have missed