எம்எல்ஏக்கள் நிதி ஒதுக்கினால் நூலகங்களுக்கு சொந்த கட்டிடம்! சட்டமன்றத்தில் செங்கோட்டையன் தகவல்

சென்னை:

ம்எல்ஏக்கள், தங்களது நிதியில் இருந்து 50 சதவிகிதம்  நிதி ஒதுக்கினால், அவர்களின் தொகுதிகளில்  நூலகங் களுக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்  தங்களது தொகுதியில் நூலக கட்டிடம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,  சட்டமன்ற உறுப்பினர்கள் 50 சதவீத நிதி ஒதுக்கினால், அவர்களது தொகுதிகளில் அரசு சார்பில் நூலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், ஏற்கனவே இலங்கையில் எரிக்கப்பட்ட யாழ்ப்பாணம் நூலகத்திற்கு 1 லட்சம்  புத்தகங்களை தமிழகஅரசு  வழங்கியுள்ளது என்றும், உலகம் முழுவதும் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நூலகங்களுக்கு 5 ஆயிரம் பிரதி நூல்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

You may have missed