காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்

டில்லி:

ர்நாடகாவில் தங்கியிருந்த எம்எல்ஏக்களுக்கு  பாஜ தொடர்ந்து  மிரட்டல் விடுத்ததாலேயே காங்-ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் ஐதராபாத்துக்கு மாற்றம் செய்யப்பட்டனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறி உள்ளார்.

பெங்களூரு அருகே உள்ள   ரிசார்ட்டில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்கள் அச்சுறுத்தப்பட்டு வந்தனர். இதன் காரணமாக அவர்களை கேரளாவிற்கு அழைத்துச் செல்ல முயற்சி மேற்கொண்டோம். அதற்கான தனி விமானமும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தனி  விமானத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்து விட்டது.

இதையடுத்தே, சாலை மார்க்கமாக அவர்களை ஐதராபாத்துக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.  இந்த ஜனநாயகமா? தற்போதைய நிலையில்,  எந்த ஒரு அரசியலமைப்பும் மீதும் நம்பிக்கை இல்லை என்றும், நீதித்துறையின் மீது மட்டுமே நம்பிக்கை இருக்கிறது என்று கூறி உள்ளார்.

ஐதராபாத் பயணமாகும் கர்நாடக காங்-மஜத எம்எல்ஏககள்

ர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத நிலையில், பாரதியஜனதாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து, எடியூரப்பாவுக்கு  முதல்வராக பதவி பிரமாணமும் செய்து  வைத்து, பெரும்பான்மை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசமும் கொடுத்த  கவர்னரின் வஜுரா வாலாவின்  செயல்பாடு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏக்கள் பெங்களூரு அருகே உள்ள ஈகிள் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் அவர்களிடம் பாரதியஜனதா கட்சி தலைவர்கள் குதிரைபேரத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்களை வேறு இடத்துக்கு மாற்ற கட்சி தலைவர்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அதற்கும் பாஜ சார்பில் முட்டுக்கட்டை போடப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று இரவு  திடீரென ரகசியமாக  அனைவரும் ஐதராபாத் அழைத்து செல்லப்பட்டனர். அங்குள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாஜகவின் குதிரை பேரத்தை தடுக்கவே ஐதராபாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் பலத்த பாதுகாப்புக்கிடையே பத்திரமாக வைக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக்கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், 104 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து எடியூரப்பா நேற்று கர்நாடக மாநில முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அதே நேரத்தில் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிருபிக்க 15 நாட்கள் கவர்னர் கால அவகாசம் கொடுத்துள்ளார்.

ஆனால் 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை கொண்டிருப்பதாக கூறி, ஆட்சி அமைக்க கோரிய ஜனதாதளம் (எஸ்), காங்கிரஸ் அணிக்கு பேரிடியாக அமைந்தது. இதையடுத்து தங்களது கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவி விடாமல் பாதுகாக்கும் பொருட்டு ஐதராபாத்துக்கு அழைத்துச்  செல்லப்பட்டுள்ளனர்.