திமுகவுடன் மனித நேய மக்கள் கட்சி தொகுதி உடன்பாடு நாளை இறுதி செய்யப்படும்: ஜஹாஹிருல்லா

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிமுக, திமுக ஆகிய முக்கிய கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்த திமுக அழைப்பு விடுத்திருந்தது. இந் நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்து உள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது: 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும். நாளை தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று கூறினார்.