மநீம கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் திடீர் மாற்றம்: கமல்ஹாசன் நடவடிக்கை

சென்னை:

க்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர்  வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் எம்.சிவக்குமாருக்கு பதில் எம்.ஸ்ரீதர் போட்டியிடுவார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில்  நாடாளுமன்ற தேர்தலையொட்டி  அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில்,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என 40 மக்களவைத் தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கடந்த 20 ம் தேதி கமல்ஹாசன் அறிவித்தார்.

அதன்படி கமீலா நாசர் மத்திய சென்னையிலும், முன்னாள் காவல்துறை அதிகாரி மவுரியா வட சென்னையிலும் போட்டியிடுகின்றனர். இந்த இருவரைத் தவிர, வேறு அறிமுகமான நபர்கள் யாரும் பட்டியலில் இடம் பெறவில்லை.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் எம்.சிவகுமாருக்கு பதில் எம்.ஸ்ரீதர் போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், ”மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் குழுவின் பரிந்துரைப்படி ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியின் மக்கள் நீதி மய்யக் கட்சியின் வேட்பாளராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த எம்.சிவகுமாருக்குப் பதிலாக எம்.ஸ்ரீதர் மக்கள் நீதி மய்யக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.