க்கள் நீதி மய்யம் ( எம்.என்.எம்.) கட்சியைத் துவங்கியிருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு, “மனித நேய மன்றம்” (எம்.என். எம்.)அமைப்பின் நிறுவனத்தலைவர் நடிகர் பார்த்திபன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பார்த்திபன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“கமலின் MNM  மக்கள் நீதி மய்யம்-பிப்-21-2018

பார்த்திபனின் MNM மனித நேய மன்றம்-மே-1- 1989” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இல்லாதவர்களின் துயர் களைய.
நிகழ்ச்சிகளின் மூலம் கிட்டும் ஈட்டும் பணத்தை பயன்படுத்துகிறேன்

80-g வரி விலக்குள்ளது உள்ளவர்கள் உதவலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, “7-வது நிமிடம் கட்சித் தலைவர் திரையுலகின் முதல்வர்
திரு கமலிடமிருந்து என் வாழ்த்துக்கு “நன்றி” வந்தது!
27 வருடங்களுக்கு முன் நான் துவங்கி இன்றும் இயங்குவது MNM = மனித நேய மன்றம் !” என்றும் பதிவிட்டுள்ளார்.

“Makkal Neethi Maiam” – MNM – என்பதை “எம் எண்ணம்” என்பதாக வாசித்து
எண்ணங்கள்  ஈடேற வாழ்த்துகிறேன்!” என்றும் கமலுக்கு பார்த்திபன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.