பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேறவேண்டும்: இந்து அமைப்புகள் கெடு

உரி தாக்குதலுக்கு பதிலடியாக 48 மணிநேரத்தில் மும்பையில் இருக்கும் பாகிஸ்தானிய கலைஞர்கள் வெளியேற வேண்டும், இல்லையென்றால் வெளியேற்றப்படுவார்கள் என்று ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் என்ற அமைப்பு கெடு விதித்துள்ளது.

raj

பாலிவுட் நகரான மும்பையில் பல்வேறு பணிகளின் காரணமாக பாகிஸ்தானை சேர்ந்த நடிகர்களும் கலைஞர்களும் அடிக்கடி வந்து தங்கிச் செல்வது வழக்கம். உரி தாக்குதலுக்கு பின்னர் கொதிப்படைந்துள்ள இந்துத்வ அமைப்புகள் பாகிஸ்தானிய கலைஞர்கள் 48 மணிநேரத்தில் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்ற விதித்துள்ளன. வெளியேறாவிட்டால் எங்கள் தொண்டர்களால் அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என்று மகாராஷ்டிர நவநிர்மாண் அமைப்பின் சித்ரபாத் சேனா தலைவர் அமெ கோபக் தெரிவித்துள்ளார்.

அதேபோல பாகிஸ்தானுடன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்து அந்நாட்டை தனிமைப்படுத்த வேண்டும் என்று சிவசேனை எம்.பி சஞ்சய் ராவ்ட் இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்துதுவ அமைப்புகள் விடுத்த எச்சரிக்கையை அடுத்து மும்பையில் இருக்கும் வெளிநாட்டினருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதி உறுதியளித்துள்ளார்.