Random image

கர்நாடகா: வாட்ஸ் அப் வதந்தி….மென்பொருள் பொறியாளர் அடித்து கொலை

பெங்களூரு:

வாட்ஸ் அப் வதந்தியால் மக்கள் தாக்கியதில் மென்பொருள் பொறியாளர் இறந்தார். 3 பேர் காயமடைந்தனர்.

ஐதராபாத்தை சேர்ந்தவர் முகமது அசாம். மென்பொருள் பொறியாளர். இவர் தனது நண்பர்களுன் காரில் சென்றார். கர்நாடக மாநிலம் பிதார் என்ற இடத்தில் காரை நிறுத்தினர். அங்கிருந்த குழந்தைகளுக்கு முகமது அசாமின் நண்பர் முகமது சலாம் சாக்லேட்களை கொடுத்தார்.

இவர் கத்தார் நாட்டை சேர்ந்தவர். இதை கண்ட அப்பகுதி மக்கள் காரில் வந்தவர்களை குழந்தை கடத்தும் கும்பல் என வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவியது. அப்போது கிராம மக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அவர்கள் அங்கிருந்து காரில் புறப்பட்டனர். ஆனால், கிராம மக்கள் அவர்களை வாகனங்களிலும் துரத்தினர். வழியில் அவர்களை மடக்கி வெளியே இழுத்து போட்டு அடித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மக்களின் பிடியில் இருந்து அவர்களை மீட்க முயற்சித்தனர்.

ஆனால் முகமது அசாம் அங்கேயே இறந்துவிட்டார். காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச் சம்பவம் தொடர்பாக 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.