தராபாத்

ல் இந்தியா மஜ்லிஸ் ஈ இட்டஹாதுல் முஸ்லமின் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி மோடியின் புதிய ஆட்சியை விமர்சித்துள்ளார்.

இஸ்லாமியர்களுக்காக அசாதுதின் ஓவைசியால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி ஆல் இந்தியா மஜ்லிஸ் ஈ இட்டஹாதுல் முஸ்லமின் கட்சி ஆகும்.    இதை சுருக்கமாக ஐமிம் என அழைக்கின்றனர்.   ஓவைசி முந்தைய ஆட்சியில் இருந்தே பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை  பெற்றும் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.   மீண்டும் பிரதமராக மோடி வரும் 30 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார்.    இது குறித்து பல அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அசாதுதின் ஓவைசி, “பிரதமர் அரசியலமைப்பு சட்டத்தின் படி பதவி ஏற்க உள்ளார்.   அதே நேரத்தில் நான் அச் சட்டத்தில் மிருகங்களை விட மனித உயிருக்கு மதிப்பு அதிகம் என குறிப்பிட்டுள்ளதை அவருக்கு நினைவு படுத்துகிறேன்.   இந்த அடிப்படையை பிரதமர் புரிந்துக் கொண்டால் மனிதர்கள் தங்கள் உயிர் பயத்தை விட்டு விடுவார்கள்.

பாஜகவின் ஆட்சியில் பசு பாதுகாவலர்களால் பல இடங்களில் கும்பல் கொலைகள் நடந்துள்ளன.    சிறுபான்மையினர் பயமின்றி வாழலாம் என தெரிவிக்கும் பிரதமரின் பிரசார மேடையின் முன் வரிசையில் முகமது அக்லாக் கை கொன்ற கும்பல் கொலையாளிகள் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

எனவே இஸ்லாமிய மக்கள் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததால் அச்சமுற்றுள்ளனர்.    மோடியின் இந்த ஆட்சியிலும் கும்பல் கொலைகள் தொடரும் என பல இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.   இந்த அச்சம் அவர்களுக்கு அதிகரித்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.