சென்னை : பெண் காவல்துறை அதிகாரியிடமே திருட்டு

சென்னை

சைதாப்பேட்டையில் பெண் காவல்துறை அதிகாரியிடம் செல்போன் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது.

                                      மாதிரி புகைப்படம்

சென்னை மாநகர காவல்துறை யில் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளராக பரிபுணிபவர் மஞ்சுளா.   இவர் சென்னை நகரில் சைதாப்பேட்டை பகுதியில் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.   மஞ்சுளா தனது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்கு சென்றுள்ளார்.

சைதாப்பேட்டை ரெயில் நிலையம் அருகில் உள்ள கடைக்கு தனது ஸ்கூட்டரில் சென்ற அவர் ஸ்கூட்டரை கடைக்கு எதிரில் நிறுத்தி உள்ளார்.  அதன்  பிறகு கடைக்குள் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்துள்ளார்.   கடையில் இருந்து வெளியே வந்த மஞ்சுளாவுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

அவருடைய ஸ்கூட்டரில்  தொங்க விடப்பட்ட்ருந்த பை காணாமல்ப் போனதை அடுத்து அதிர்ந்து போன அவர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.   காணாமல் போன பையில் ரூ.7500 ரொக்கமும் விலை உயர்ந்த மொபைலும் இருந்ததாக மஞ்சுளா தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் திருடியவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.   மஞ்சுளா தனது ஸ்கூட்டரில் POLICE  என ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.