டில்லி

ரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை மொபைல் வாடிக்கையாளர்கள் தங்கள் எண்ணை வேறு சேவை நிறுவனங்களுக்கு மாற்ற முடியாது என டிராய் அறிவித்துள்ளது.

எம் என் பி என அழிக்கப்படும் மொபைல் நம்பர் பொர்ட்டபிலிடி திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணை மாற்றாமலே வேறு சேவை நிறுவனங்களுக்கு மாற முடியும்.   இவ்வாறு மாற வாடிக்கையாளர்கள் சுமார் 7 நாட்கள் வரை காத்திருக்க வேண்டி உள்ளது.  எனவே இதைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை டிராய் எடுத்தது.

இந்த புதிய நடவடிக்கைகளின்படி மொபைல் சேவை நிறுவனங்களை மாற்ற உள்ளூருக்கு 2 தினங்களும் மற்றும் வெளியூருக்கு 5 தினங்களும் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய திட்டத்தை அமல்படுத்தத் தேவையான தொழில்நுட்ப  நடவடிக்கைகளை மேற்கொள்ள மொபைல் சேவை நிறுவனங்களுக்கு டிராய் நவம்பர் 4 முதல் நவம்பர் 10 வரை கால அவகாசம் அளித்துள்ளது.

ஆகவே இந்த நடவடிக்கைகளை ஒட்டி நவம்பர் மாதம் 5 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் சேவை நிறுவனங்களை மாற்ற முடியாது என டிராய் அறிவித்துள்ளது.   அதாவது நவம்பர் 4 ஆம் தேதி அன்று மாலை 6 மனி முதல் 10 ஆம் தேதி இரவு 11.59 வரை சேவை நிறுவனங்களை மாற்ற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.