ம்மு

ம்முவில் கடந்த 5 ஆம் தேதிக்கு முன்பு முடக்கப்பட்ட மொபைல் சேவை ஐந்து மாவட்டங்களில்  திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.

விதி எண் 370 ஐ நீக்கி காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு கடந்த 5 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொபைல் சேவை, இணையச் சேவை ஆகியவை முடக்கப்பட்டன. அத்துடன் மாநிலம்  இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆயினும் ஊரடங்கு சட்டம், தொலைபேசி, மொபைல் மற்றும் இணையச் சேவை முடக்கம் தொடர்ந்து வந்தது. இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல  பொதுமக்கள் காஷ்மீரில் வாழும் தங்கள் உறவினர்களைப் பற்றிய எவ்வித தகவலும் கிடைக்காமல் தவித்து வந்தனர். ஆயினும் மத்திய அரசு கட்டுப்பாட்டுக்களை நீக்கவில்லை. பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் காஷ்மீரில் புட்காம், சோனாமார்க், மணிகம், குரேஸ், டங்க்மார்க்,  உரி, டங்க்தார் உள்ளிட்ட பகுதிகளில் லாண்ட் லைன் தொலைப்பேசி தேவை தொடக்கியது. ஆனால் தொடர்பு சரியாகக் கிடைப்பதில்லை எனப் பலரும் புகார் அளித்தனர். அதைச் சரி செய்யும் பணிகள் இன்னும் தொடர்வதாக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜம்மு பகுதியில் தோடா, கிஷ்ட்வார், ராம்பன், ரஜவுரி, பூஞ்ச் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மொபைல் சேவை மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே ஆகஸ் 17 ஆம் தேதி முதல் இந்த பகுதியில் உள்ள ஜம்மு, ரியாசி, சம்பா, காத்து,  மற்றும் உதாம்பூர் பகுதிகளில் கடந்த 17 ஆம் தேதி முதல் இணையச் சேவை மீண்டும் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.