சென்னை

தமிழக அரசு நடத்தும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மணவர்களுக்கான வினாத்தாள் வடிவமைப்பு இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

தமிழக இடை நிலைக் கல்வி வாரியத்தின் கீழ் மாணவர்களுக்கு 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பு அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வடிவமைப்பை www.dge.tn.gov.in என்னும் இணையதளத்தின் உள் சென்று தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அளிக்க வேண்டும் என அரசு தெரிவித்துளது.

இந்த தளத்தில் மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.