நவீன அடிமைத்துவம் – உலகளவில் அதிக பெண்கள் பாதிப்பு!

ஜெனிவா: உலகளவில் நவீன அடிமைத்துவத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களின் எண்ணிக்கை 71% என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இதன்படி, உலகளவில், 130 பெண்களில் ஒருவர் என்ற அளவில், நவீன அடிமைத்துவம் பெண்களைப் பாதித்துள்ளது.

இந்த அளவு ஆசியா & பசிபிக் நாடுகளில் 73% மற்றும் ஆப்ரிக்காவில் 71%, ஐரோப்பா & மத்திய ஆசியாவில் 67% மற்றும் அமெரிக்காவில் 63% என்றுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆண்களைவிட நவீன அடிமைத்துவத்தால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் குறைந்தபட்சம் 2.9 கோடி பெண்கள், இந்தவகை அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதோடு, பாலியல் வன்முறைகள், கட்டாய திருமணங்கள், கடன், கொத்தடிமை, கட்டாய உழைப்பு உள்ளிட்டவை இந்த நவீன அடிமைத்தனத்தில் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.