நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி,  மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும் தடுப்பு மருந்து வயதானவர்களுக்கும் மிகவும் பாதுகாப்பானதாக அறியப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா தொடரில்  மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது வயதானவர்களே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
வயதானவர்களில் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் ஆரம்ப கட்ட பாதுகாப்பு ஆய்வின் முடிவுகள், இளைஞர்களுடன் ஒப்பிடுகையில், வயதானவர்களுக்கும் சிறந்த வைரஸை செயலிழக்கச் செய்யும் ஆன்டிபாடிகளை உருவாக்கியது என்பதைக் காட்டியது. பக்கவிளைவுகள் பொறுத்தவரையில், சிறு அளவிலான காய்ச்சல் போன்றவை ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, வயதானவர்களுக்கு தடுப்பூசியின் பாதுகாப்பைப் பற்றிய முழுமையான விளக்கத்தை நமக்கு அளிக்கிறது.

வயதுக்கு ஏற்ப நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைவதால் கொரோனா சார்ந்த உயிரிழப்புகள் வயதானவர்களில் அதிகமிருந்ததை பல் வேறுபட்ட ஆய்வுகளும் உறுதிப்படுத்தியிருந்தது என்று அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தின் ஆய்வின் முன்னணி ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் இவான் ஆண்டர்சன் ஒரு தொலைபேசி பேட்டியில் கூறினார். இந்த ஆய்வு மாடர்னாவின் முதற்கட்ட பாதுகாப்பு சோதனையின் நீட்டிப்பாகும். இது முதலில் 18-55 வயதுடைய நபர்களில் நடத்தப்பட்டது. 56 முதல் 70 மற்றும் 71 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 40 பெரியவர்களில், 25 மைக்ரோகிராம் மற்றும் 100 மைக்ரோகிராம் – இரண்டு அளவிலான தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக, 100 மைக்ரோகிராம் டோஸில் 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் பெற்ற வயதானவர்களில், இலைகர்களைப் போலவே  நோயெதிர்ப்பு செயல்பாடுகளை தூண்டியது. மாடர்னா ஏற்கனவே பெரிய அளவிலான இரண்டாம் கட்ட  சோதனையில் அதிக அளவு டோஸ் ஒன்றையும் சோதித்து வருகிறது, இது அவசரகால அங்கீகாரம் அல்லது ஒப்புதலைப் பெறுவதற்கு முன்பான இறுதி கட்டமாகும். தலைவலி, சோர்வு, உடல் வலிகள், குளிர் மற்றும் ஊசி  போடப்பட்ட இடத்தில் வலி உள்ளிட்ட பக்க விளைவுகள் முக்கியமாக லேசானவை முதல் மிதமானவை எனக் கருதப்பட்டன. இருப்பினும், குறைந்தது இரண்டு நிகழ்வுகளில், தன்னார்வலர்கள் கடுமையான எதிர்விளைவுகளையும் கொண்டிருந்தனர் என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து பெற்ற ஒருவர் தரம் 3 அளவிலான – 102.2 டிகிரி பாரன்ஹீட் (39 ° C) அல்லது அதற்கு மேல் என வகைப்படுத்தப்பட்ட காய்ச்சலை கொண்டிருந்தார். வேறொருவருக்கு கடுமையான சோர்வு – தினசரி நடவடிக்கைகளை தற்காலிகமாகத் தடுக்கும் அளவுக்கானது – பெற்றதாக ஆண்டர்சன் கூறினார். பொதுவாக, தடுப்பு மருந்து பெற்றவுடன் விரைவில் பக்க விளைவுகள் ஏற்பட்டன. அதேபோல குணப்படுத்தவும் செய்யப்பட்டது என்றார். “இது அதிக வயதுடையவர்கள் அதிக அளவு இன்ஃப்ளூயன்ஸா தடுப்பு மருந்து பெற்றபோது இருந்ததைப் போலவே அவர்கள் உணரலாம் அல்லது காய்ச்சல் இருக்கலாம் ” என்று ஆண்டர்சன் கூறினார். ”

உதாரணமாக, தடுப்பு மருந்தின் குறைந்த அளவை எடுத்துக் கொண்ட எமோரியின் 65 வயதான மூத்த மல்டிமீடியா டெவலப்பர் நார்மன் ஹல்ம், நியூயார்க் மற்றும் வாஷிங்டன் மாநிலத்தில் பலரும் வைரஸை எதிர்த்துப் போராடுவதைப் பார்த்த பின்னர் இந்த ஆய்வில் பங்கேற்க நிர்பந்திக்கப்பட்டதாக உணர்ந்ததாகக் கூறினார். நியூயார்க் பகுதியில் வளர்ந்த ஹல்ம், “எனக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. மாடர்னாவின் தடுப்பூசி ஒரு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை அறிந்திருப்பதாகவும், அதை எடுத்துக்கொள்வதில் ஆபத்து இருக்கலாம் என்றும் ஹல்ம் கூறினார். ஆனாலும் “யாரோ ஒருவர் இதைச் செய்யத்தான்  வேண்டும்” என்றார்.