டெல்லி:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தம் வகையில், இன்று இரவு 8 மணிக்கு மக்களிடம் மீண்டும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, 22ந்தேதி மக்கள் சுய ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் வேண்டுகோள் விட, வட மாநிலங்களில் பல இடங்களில் இரவு 9 மணிக்கு பிறகு, பல இடங்களில், கொரோனா தொற்று குறித்து அறியாமல், அதை வெற்றிக்கொண்டாட்ட மாக ஆடி மாடி குதுகளித்தனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி வேதனை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று இரவு  (மார்ச் 24) இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி, மீண்டும் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் பல்வேறு மாநிலங்கள் முடக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கொரோனாவை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

.இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக இன்று, இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.