வாரணாசி:

விவசாயிகளை வஞ்சித்து வரும் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக விவசாயிகள் மட்டுமின்றி தெலுங்கானா மாநில மஞ்சள் விவசாயிகளும்  வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சுமார் 25 விவசாயிகள் மனுதாக்கல் செய்த நிலையில்,  ஒரே ஒரு விவசாயியின் மனு மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது. மற்ற 24 பேரின் மனுக்கள்  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 30 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

2வது முறையாக பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக  தமிழகம் மற்றும் தெலங்கானாவிலிருந்து விவசாயிகள்  போட்டியிட போவதாக அறிவித்தனர்.

இறுதியாக தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத்திலிருந்து 25 மஞ்சள் விவசாயிகள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 4 விவசாயிகள் போட்டியிட முடிவு செய்தனர். அவர்கள் மோடிக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முடிவடைந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 119 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் 89 வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது.

அதில் 24 விவசாயிகளின் மனுக்களை தள்ளுபடி செய்துள்ள தேர்தல் அலுவலர், ஒரே ஒரு விவசாயி மட்டும் மோடிக்கு எதிரான போட்டியில் களத்தில் உள்ளார்.

விவசாயி ஸ்டாரி நரசய்யா என்ற ஒரே ஒரு விவசாயி மட்டும் மோடிக்கு எதிராக களத்தில் உள்ளார். இறுதியாக மொத்தம் 30 பேர் வாரணாசியில் போட்டியிடுகின்றனர்.