டெல்லி:

திகார போதையில் இருக்கும் மோடி – அமித்ஷா அரசு கண்ணியமில்லாதது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி ஆவேசமாக பேசியுள்ளார்.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், மத்திய அரசுக்கு சோனியாகாந்தி அறிவுரை கூறி வீடியோ வெளியிட்டு உள்ளார்.

அதில், பொது மக்களளின் குரலுக்குச் செவி சாய்க்க வேண்டியது அரசின் கடமை ஆனால்  பாஜக அரசு மக்களின் குரல்களை முற்றிலும் புறக்கணிப்பதுடன், முரட்டுத் தனமான சக்தியைப் பயன் படுத்தி வருகிறது. இது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாதது.

பாஜக அரசின் பிரிவினைவாத கொள்கைகளுக்கும், மக்கள் விரோத செயல்களுக்கும் எதிராகப் பல்கலைக் கழகங்கள், ஐஐடி, ஐஐஎம் மற்றும் பல கல்வி நிறுவனங்களில் தன்னெழுச்சியாக போராட்டங்கள் எழுந்துள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பாஜக அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகக் காங்கிரஸ் ஆழ்ந்த வருத்தத்தையும், அக்கறையையும் தெரிவிக்கிறது.

ஜனநாயகத்தில் ஒரு அரசின் தவறான கொள்கைகளையும், முடிவுகளை எதிர்த்துப் போராட மக்களுக்கு உரிமை இருக்கிறது. அவர்களின் குரலுக்குச் செவி சாய்க்க வேண்டியது அரசின் கடமை.

பாஜக அரசு மக்களின் குரல்களை முற்றிலும் புறக்கணிப்பதுடன், முரட்டுத் தனமான சக்தியைப் பயன்படுத்தி வருகிறது. இது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாதது.பாஜகவின் இது போன்ற செயல்களைக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளவர்,  ”குடியுரிமை திருத்தச் சட்டமும், என்.ஆர்.சி திட்டமும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். இதனால் மக்கள் தங்களது மற்றும் முன்னோர்களின் குடியுரிமையை நிரூபிக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள்” , காங்கிரஸ் எப்போதும் மாணவர்களுக்கும் மக்களுக்கும் தோழமையாக இருக்கும் என்றும், என்றும் தெரிவித்து உள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகத் தீவிரமாக நடைபெற்று வரும் சோனியா காந்தி வீடியோவும் வைரலாகி வருகிறது.