‘மோடியும் 40 திருடர்களும்’: காங். மூத்த தலைவர் கபில்சிபல் காட்டம்

டில்லி:

ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் விவகாரம் குறித்து  மோடி அரசு எப்போது பதில் அளிக்கப் போகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.

நம் நாடு ஏற்கனவே   ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ என்ற கதையைக் கேட்டிருக்கிறது, ஆனால், தற்போது, அதை  மோடி ஆட்சியில் நேரடியாக பார்த்து வருகின்றது என்றும்,  பிரதமர் மோடி நாட்டுக்குப் பிரதமரா? இல்லை அம்பானிக்குப் பிரதமரா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஒப்பந்த விவரத்தை வெளியிடவும் கோரி வருகிறது. ஆனால், இதை பாஜக அரசு ஏற்க மறுத்து பிடிவாதமாக இருந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக – காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரான ராபர்ட் வதேராவின் நண்பர் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளிக்காத காரணத்தால்தான் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது என்றும்,  சர்வதேச  கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு  காங்கிரஸ் செயல்படுகிறது என்றும் பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங்  கூறிய தாவது, ”ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் நடந்த ஊழல் குறித்து கேள்வி கேட்டாள், கேட்பவரின் குடும்பத்தாரினை மீது சேற்றை வாரி இறைப்புது தான் பாஜக-வின் குணம்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது, அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி ஆட்சி அனில் அம்பானியின் டிபென்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளித்துள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது, 2012-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி ஒப்பந்தப் புள்ளி கொடுக்கப்பட்டது, 2014-ஆம் ஆண்டு மார்ச் 13-ம் நாள் ஒப்பந்தப் புள்ளி திறக்ப்பட்டது.

நாங்கள் மத்திய அரசின் ஹால் (HAL) நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளித்தோம். ஆனால், மோடி அரசு ஹால் (HAL) நிறுவனத்துக்குக் கொடுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் காரணம் கேட்டால், மத்திய அமைச்சர்களும், பாஜகவினரும் தவறான வார்த்தை களையும், சேற்றை வாரி இறைக்கும் பேச்சுகளையும் பேசுகிறார்கள் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான  கபில்சிபல், நம்நாடு ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ என்ற கதையைக் கேட்டிருக்கிறது, ஆனால், தற்போது மோடி ஆட்சியில் நேரடியாக பார்த்து வருகின்றது.

பிரதமர் மோடி நாட்டுக்குப் பிரதமரா? இல்லை அம்பானிக்குப் பிரதமரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏப்ரல் 8,2015 அன்று, பிரதம மந்திரி ரபேல்  இந்திய பிரதமர் பிரான்சிற்கு விஜயம் செய்யும் போது ஏப்ரல் 10, 2015 ரஃபேல் ஒப்பந்தம் போடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.. ஆனால் 36 ரபேல் விமான ஒப்பந்தங்களைப் பற்றி பிரதமர் அறிவித்தார், அவர்களில் யாரும் அறிந்திருக்கவில்லை என்று கூறினார்.