சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் : வாய் திறக்காத மோடியும் அமித் ஷாவும்

டில்லி

டந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் எதுவும் கூறாமல் உள்ளனர்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்துள்ளது. இது குறித்து அனைத்துக் கட்சியினரும் தலைர்களும் கருஹ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2014 ஆம் வருடம் நடந்த பொதுத் தேர்தலைல் வெற்றி அடைந்து மத்திய ஆட்சியை பிடித்த பாஜக அதன் பிறகு மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை பிடித்தது.

பாஜகவினர் இந்த வெற்றிக்கு பிரதமர் மோடியின் புகழும் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் தேர்தல் கொள்கைகளுமே காரணம் என தெரிவித்தனர். ஒவ்வொரு மாநில வெற்றிக்குப் பிறகும் மோடியும் அமித்ஷாவும் பாஜக தலைமையகத்தில் உறையாற்றிவது வழக்கம். அத்துடன் வெற்றிக்கு காரணமாக மோடியை அமித்ஷாவும் அமித்ஷாவை மோடியும் புகழ்வதும் வழக்கமாக இருந்து வந்தது

தற்போது நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்துள்ளது. இந்த தேர்தல் முடிவுக்குப் பின் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்டார். அப்போது அவர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உரையாற்றினார். இந்த மூன்று மாநிலத்தில் ஆட்சியை இழந்தது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.

அதே போல் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்துக்கு தலைமை தாங்கி உரையாற்றினர். அப்போது அவரும் மோடியைப் போலவே சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்து மௌனமாக இருந்துள்ளார். இந்த தேர்தல் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலின் அரை இறுதி என அனைவரும் கூறி வரும் வேளையில் இவர்கள் இருவரின் மௌனம் உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

முக்கியமாக பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மோடி இது குறித்து ஏதும் கருத்து சொல்வார் என எதிர்பார்த்து ஏமாந்துள்ளனர். மோடி தனது டிவிட்டரில் மக்களின் தீர்ப்பை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார். ஆனால் அமித் ஷா இது வரை இந்த தேர்தல் முடிவுகள் குறித்து வாயே திறக்கவில்லை.