டில்லி:

கோட்சே ஒரு தேச பக்தர் என பாஜக வேட்பாளர்  இளம்பெண் சாமியார் பிரக்யா சிங் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரை மன்னிப்பு கேட்க பாஜக தலைமை அறிவுறுத்தியது.

அதைத்தொடர்ந்து, அவர் தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்த நிலையில், பாஜக தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரும்  மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்  திக் விஜய் சிங் வற்புறுத்தி உள்ளார்.

கமலின் இந்து தீவிரவாதம் குறித்த பேச்சு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  போபால் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான சாமியாரினி பிரக்யா சிங், ல், ‘நாதுராம் கோட்சே சிறந்த தேச பக்தர் என கூறினார். இது மேலும் சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில், பாஜக தலைமை அவரை உடடினயாக மன்னிப்பு கோர உத்தரவிட்டது.

இதையடுத்து,  பிரக்யா சிங் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். ‘நான் கூறிய கருத்து யாரையாவது பாதித்திருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்’ என கூறியிருந்தார்

இந்த நிலையில் போபால் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான  திக் விஜய் சிங், ‘நாதுராம் கோட்சே சிறந்த தேச பக்தர் என பிரக்யா  புகழ்ந்து கூறியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கோட்சேவை போற்றுவது தேசபக்தி அல்ல. தேச துரோகம் ஆகும். பிரக்யாவின் இந்த சர்ச்சை கருத்துக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கூறியுள்ளார்.