டில்லி

மீபத்திய தேர்தல் பிரசார உரைகளில் பணமதிப்புக் குறைப்பு பற்றி மோடியும் அமித்ஷாவும் கூறுவதில்லை.என ஆங்கில நாளேடு ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த வருடம் நவம்பர் 8 ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்தார்.   நாட்டில் பெரும்பாலான கறுப்புப் பணம் இந்த நோட்டுக்களில் இருப்பதால் இது கறுப்புப் பண முதலைகளுக்கு ஒரு மாபெரும் அடி என பலராலும் புகழப்பட்டது.   கடந்த வருடம் நடந்த உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் தேர்தல் பிரசாரத்தில் இந்த பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையே முக்கியமாக சொல்லப்பட்டது.  பிறகு ரிசர்வ் வங்கி வெளியிட ஆண்டறிக்கையில் மொத்தமுள்ள ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளில் 99% க்கு மேல் வங்கிக்கு திரும்ப வந்தது தெரிந்தது.

அதன்  பிறகு தற்போதைய தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மோடியும் அமித் ஷாவும் பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையைப் பற்றி கூறுவதை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளனர்.  இது குறித்து ஒரு ஆங்கில நாளேடு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த ஆங்கில நாளேட்டின் அறிக்கையில் “பணமதிப்புக் குறிப்பு நடவடிக்கை குறித்து கடந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி முதல் இந்த ஆண்டு ஃபிப்ரவரி 27 வரையில் மோடியும் அமித் ஷாவும்  தங்கள்து 24 உரையில் 54 முறை குறிப்பிட்டுள்ளனர்.   ஆனால் தற்போதைய குஜராத்  மற்றும் இமாசலப் பிரதேச தேர்தல் பிரச்சார 14 பேரணிகளில் மூன்று முறை மட்டுமே இது பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.  ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை வந்ததும் அது பற்றிக் குறிப்பிடுவதை குறைத்துக் கொண்ட இருவரும் தற்போது பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை பற்றி பேசுவதே இல்லை” என தெரிவித்துள்ளது.