டில்லி:

காஞ்சிபுரம் அத்திவரதனை தரிசிக்க பிரதமர் மோடி வரும் 23ந்தேதி காஞ்சிபுரம் வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும்  காஞ்சி வரதராசப் பெருமாள் கோயிலில், அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் காஞ்சி நகருக்கு வருகின்றனர்.

மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் வருகின்றனர்.

வரும் 23 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலமாக காஞ்சிபுரம் நகருக்கு வருகை தரும் மோடி, அமித்ஷா ஆகியோர்,  அன்று சயனக் கோலத்தில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு, அங்கேயே தங்கியிருந்து விட்டு மறுநாள் காலை நின்ற கோலத்தில் எழுந்தருளும் . ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் வரும் மோடி அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் காஞ்சிபுரம் கோயிலுக்கு செல்கிறார்.

மோடி வருகையை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு வருகிறது