டில்லி

ராக்கில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என பிரதமர் மோதி அறிவித்துள்ளார்.

ஈராக் நாட்டின் மோசூல் நகரில் கடந்த 2014ஆம் வருடம் ஐ எஸ் தீவிரவாதிகளால் இந்தியாவை சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் கடத்தப்பட்டனர்.   அவர்கள் பத்திரமாக இருப்பதாக அரசு பல முறை உறுதிப் படுத்தியது.   இந்நிலையில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாராளுமன்றத்தில் அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் வி கே சிங் அவர்களின் உடல்களை எடுத்து வருவார் எனவும் அறிவித்தார்.

ஈராக் சென்ற அமைச்சர் வி கே சிங் மரபணு சோதனையில் அடையாளம் காணப்பட்ட 38 சடலங்களை தனி விமானத்தில் அமிர்தசரசுக்கு எடுத்து வந்தார்.  அப்போது நிவாரணத் தொகை என்பது அனைவருக்கும் அளிக்கும் பிஸ்கட் அல்ல என அவர் கூறியது பரபரப்பை உண்டாக்கியது.   இதையொட்டி காங்கிரசை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் நிவாரணத் தொகை அளிக்குமாறு போராட்டம் நடத்தினர்.

அந்தப் போராட்டத்துக்கு பின் பிரதமர் மோடி கொல்லப்பட்ட 39 கட்டுமான தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.    ஏற்கனவே பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தகுதிக்கு ஏற்ப அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.