எல்லையில் பதற்றம்: சீன அதிபருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய மோடி!

--

டில்லி,

சிக்கிம் மாநிலத்தில் இந்தியா சீனா எல்லை பிரச்சினை காரணமாக இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், சீன அதிபருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரி வித்துள்ளார் பிரதமர் மோடி.

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள டோகோலாம் விவகாரத்தில், இந்தியா மற்றும் சீனாவுக்க இடையே போர் பதற்றம் நிலவி வருகிறார்.  எல்லையில் இரு நாட்டினரும் படைகளை குவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சீன அதிபர் ஜிங்பிங் மற்றும் அந்நாட்டு பிரதமர் லி கெகியாங்கிற்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்நாட்டின் சமூக வலைதளமான சீன வெய்போ இணையதளத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

You may have missed