ஆகஸ்டு 15: சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் ‘மோடி கேர்’ திட்டம் அறிமுகம்

டில்லி:

ரும் ஆகஸ்டு 15ந்தேதி  சுதந்திரத் தினத்தன்று நாடு முழுவதும் ‘மோடி கேர்’  எனப்படும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பட்ஜெட்டில் இதுகுறித்து அறிவித்து, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மேற்குவங்காளம் உள்பட  ஒருசில மாநிலங்கள் திட்டத்தில் இணைய மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் பெரும்பாலான மாநிலங்கள் மோடி கேர் திட்டத்தை ஆதரித்துள்ளன.

மோடி கேர்  திட்டத்தின்படி,  இந்தியாவில் உள்ள 50 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும் என்றும்,   ஏழை, எளிய மக்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெற முடியும் ,  இதற்கான செலவினங்களில் 40% மாநில அரசுகள் பங்களிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டி ருக்கிறது.

இந்த திட்டத்தில்  தமிழகம் உள்பட 14 மாநிலங்கள்  வரும் 14ந்தேதி அதிகாரப்பூர்வமாக இணைகின்றன. அதற்கான ஒப்பந்தம் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே போடப்பட உள்ளது.

அதைத்தொடர்ந்து, மாநிலங்களில்  மோடி கேர்  திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழி முறைகளை மத்திய சுகாதாரத்துறை ஆராய்ந்து வகிறது. அடுத்த மாதம் ( ஆகஸ்ட் 15ம் தேதி) சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த  திட்டத்தை நாடு முழுவதும்  அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி, மீண்டும் ஆட்சியை பிடிக்க மோடி அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்து வதில் மும்முரம் காட்டி வருகிறது.