‘மோடி கேர்:’ புதிய மருத்துவ காப்பீடு திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

டில்லி:

த்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது புதிய காப்பீடு திட்டம் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. ராஞ்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என்று பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்திருந்தது.

‘மோடி கேர்’;  இந்த மருத்துவ காப்பீடு திட்டம்  உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த காப்பீடு திட்டத்திற்கான பயனாளர்கள், கடந்த  2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூக பொருளாதாரம் மற்றும் சாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.1000 முதல் ரூ.1200 வரை காப்பீட்டுத் தொகை செலுத்தி, ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் இந்த மருத்துவக் காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவக் காப்பீடு திட்டமானது முற்றிலும் பணமற்ற திட்டமாகும்.

இந்த திட்டத்துக்கு தேவையான நிதியில் 60 சதவீதம் மத்திய அரசினாலும், மீதித் தொகையை மாநில அரசுகளும் ஏற்கும்.

மோடி கேர் மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக நாடு முழுவதும்  உள்ள  மத்திய அரசு மருத்துவமனைகள், மாநில அரசின் மருத்துவ மனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் சுமார் 15 ஆயிரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது

இந்த மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டம், தீனதயாள் உபாத்யாயா பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 25-ந்தேதி தொடங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதை தேதி மாற்றப்பட்டு வரும் 23ந்தேதி (நாளை)  தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மோடி கேர் மருத்துவ காப்பீடு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து  வருகிற 26-ந்தேதி முதல் இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'Modi Care' New Medical Insurance Scheme: Prime Minister Narendra Modi starts tomorrow, 'மோடி கேர்:' புதிய மருத்துவ காப்பீடு திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
-=-