குஜராத் தேர்தல் : வரிசையில் நின்று வாக்களித்த பிரதமர் மோடி

பர்மதி

குஜராத் சட்டமன்ற தேர்தலில் பிரதமர் வாக்களித்தார்.

இன்று குஜராத் சட்டசபைக்கான இரண்டாம் மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் நடைபெறுகின்றது.   இன்று மும்பையில் ஐ என் எஸ் கல்வாரி நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் இணந்தது.   மும்பையில் நடந்த இந்த விழாவில் கலந்துக் கொண்ட மோடி வாக்களிக்க குஜராத் வந்தார்.  அவரை அமித்ஷா வரவேற்றார்

அதன் பின் சபர்மதியில் உள்ள ஒரு பள்ளியில் பிரதமர் மோடி வரிசையில் நின்று வாக்களித்தார்.   அவர் வருகையை யொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.  வாக்களிக்க வரிசையைல் நின்றிருந்த போது சக வாக்காளர்களுடன் மோடி பேசிக் கொண்டிருந்தார்.    முன்னதாக பாஜக தலைவர் அமித்ஷா நாரான்புராவில் உள்ள வாக்கு சாவடியில் வாக்குப் பதிவு செய்தார்.