1
பிரதமர் மோடியின் பி.ஏ மற்றும் எம்.ஏ. கல்விச்சான்றிதழ்கள் போலியானவை என்ற டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையானது.
இந்த நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அமித்ஷா, இரு சான்றிதழ் நகல்களை பத்திரிகையாளர்களிடம் அளித்தார். இதுதான் மோடியின் சான்றிதழ்கள். இனியாவது ஆதாரமின்றி  கெஜ்ரிவால் பேசக்கூடாது என்றார்.
இந்த செய்தியை பத்தரிகை டாட் காம் இதழில் வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் கெஜ்ரிவால், குற்றச்சாட்டு உண்மையே. அமித்ஷா காண்பித்த சான்றிதழ்கல் போலியானவை என்று ஆம்ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
“”பிரதமர் மோடியின் பெயர் பி.ஏ. சான்றிதழில் ‘நரேந்திரகுமார் தாமோதரதாஸ் மோடி’ என்று உள்ளது. அதே சமயம் அவரது எம்.ஏ. சான்றிதழில் ‘நரேந்திர தாமோதரதாஸ் மோடி’ என்று  இருக்கிறது.
ஒருவேளை அவர் தனது பெயரை மாற்றிக்கொண்டார் என்றால், அதற்கான  அபிடவிட் எங்கே?
மேலும் பிரதமரின் பி.ஏ. மார்க்‌ஷீட்டில் 1977 என்று உள்ளது. ஆனால் அவரது பி.ஏ. சான்றிதழில் 1978 என காணப்படுகிறது.  ஆகவே, அமித்ஷாவும்  ஜெட்லியும் வெளியிட்ட பிரதமரின் கல்வி சான்றிதழ் போலியானது” என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான அஷுடோஸ் டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.