ராஜஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நினைவு தின கொண்டாட்டம்….மோடி தொடங்கி வைத்தார்

ஜெய்ப்பூர்:

கடந்த 29-.9-.2016ம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இந்திய வீரர்கள் புகுந்து நடத்திய அதிரடி தாக்குதலில் அங்கிருந்த 7 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சர்ஜிக்கல் ஸ்டிரைக் என கூறப்பட்ட இந்த தாக்குதல் நடைபெற்ற 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று 28ம் தேதி முதல் முதல் 30-ம் தேதிவரை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

‘பராக்ரம் பர்வ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கொண்டாட்டத்தை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். கோனார்க் போர் நினைவு சின்னம் வளாகத்தில் இந்திய ராணுவத்தின் ஆற்றலை வெளிப்படுத்தும் கண்காட்சியை பிரதமர் மோடி, ராணுவ நிர்மலா சீதாராமன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இங்குள்ள வருகையாளர் பதிவேட்டில் மோடி கையெழுத்திட்டார். அதில், ‘‘தாய்நாட்டை காக்கும் அர்ப்பணிப்பு உணர்வுள்ள வீரர்களை எண்ணி நாடு பெருமிதம் கொள்கிறது. அவர்களின் தியாகம் எதிர்கால தலைமுறையினருக்கு ஊக்கசக்தியாக விளங்கும்’’ என குஜராத்தி மொழியில் மோடி எழுதியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி