ராகுல் காந்தியை அவரங்கசீப்புடன் மோடி ஒப்பீடு

ரம்பூர், குஜராத்

ணிசங்கர் ஐயரின் ராகுல் காந்தி பற்றிய கருத்துக்கு மோடி பதில் அளித்துள்ளார்.

நேற்று காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அவருக்கு காங்கிரஸ் தலைவர்களும், தோழமைக் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.   இதற்கு மணி சங்கர் ஐயர் தெரிவித்த கருத்துக்கு மோடி பதில் அளித்துள்ளார்.  குஜராத் தேர்தலையொட்டி தரம்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் மோடி நேற்று உரையாற்றினார்.

மோடி தனது உரையில், “காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான மணிசங்கர் ஒரு கருத்து தெரிவித்துள்ளார். அவர் ’முகலாய ஆட்சிக்காலத்தில் எப்போது தேர்வு நடைபெற்றது? ஜஹாங்கீருக்குப் பின் தேர்தல் இல்லாமல் தான் ஷாஜகான் அரசரானார்.  ஷாஜகானுக்குப் பிறகு அவுரங்க சீப் தேர்தல் நடத்தித் தான் அரசரானாரா? அது போலத்தான் காங்கிரஸ் தலைமையும்’ என அவர் கூறுகிரார்.  அப்படியானால் காங்கிரஸின் தலைவர்களே அது கட்சியல்ல.  ஒரு குடும்பம் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.  காங்கிரசின் அவுரங்கசீப் அரசாட்சிக்கு என் வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.

மணிசங்கர் ஐயரின் முந்தைய சில கருத்துக்களும் கடும் சர்ச்சையை உண்டாக்கியது தெரிந்ததே. முன்பு அவர் மோடியை டீக்கடைக்காரர் என குறிப்பிட்டதும் பெரும் சர்ச்சை ஆகி உள்ளது.  தலைவரைக் கட்சி போட்டியின்றி தேர்ந்தெடுப்பது பற்றி அவர் கூறிய கருத்து, தற்போது பெரும் சர்ச்சை ஆகி உள்ளது.  மணிசங்கர் ஐயர் முகலாய வம்ச அரசர்களை தேர்ந்தெடுத்ததை ராகுல் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கும் சமயத்தில் குறிப்பிட்டதால் எதிர்க் கட்சியினர் புது அர்த்தம் கண்டு பிடித்து அவரை தாக்கி வருகின்றனர் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.