காஷ்மீர் : ரம்ஜான் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா ? மோடி ஆலோசனை

டில்லி

காஷ்மீர் மாநிலத்தில் ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடந்தி உள்ளார்.

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு காஷ்மீர் மாநிலத்தில் ஒரு மாதம் போர் நிறுத்தம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.   அந்த போர் நிறுத்தம் இன்றுடன் முடிவடைகிறது.   இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி காஷ்மீர் நிலவரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நிகழ்த்தினார்.  இதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் ராவல் மற்றும் ராணுவத்துறை, உளவுத்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

காஷ்மீரில் உள்ள அனைத்துக் கட்சிகளும் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டன.   இது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப் பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.   அனேகமாக இன்று போர் நிறுத்தம் நீட்டிப்பது குறித்து மோடி இறுதி முடிவை அறிவிப்பார் என தெரிய வருகிறது.