புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை பாராட்டி டிவிட்டர் பதிவிட்ட மோடி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை பாராட்டி பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சாக்கடை கால்வாயை முதலமைச்சர் நாராயணசாமி தன் கையால் சுத்தப்படுத்தியதை மோடி பாராட்டியுள்ளார்.

pondy

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களில் நடவடிக்கைகளும், திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைப்பணிகள் நடைபெற்றன.

அப்போது, தூய்மை இந்தியா திட்டத்தைத் தொடங்கி வைத்த நாராயணசாமி, அங்கிருந்த சாக்கடை கால்வாயில் இறங்கி, தூர்வாரினார். அதைப் பார்த்த டெல்லி பிரதிநிதி ஜான் குமாரும் அவருடன் இணைந்து சாக்கடை கால்வாயைத் தூர்வாரத் தொடங்கினார்.

இது தொடர்பான வீடியோவை முதல்வர் நாராயணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், பிரதமர் மோடி அவரைப் பாராட்டி ட்விட் செய்துள்ளார். அதில், “தூய்மை இந்தியா திட்டத்தை முன்னின்று நடத்துவதற்கும், அதை வலுப்படுத்துவதற்கும் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.