மோடி இரண்டு விதமான இந்தியாவை உருவாக்கி இருக்கிறார் : டிவிட்டரில் ராகுல்

--

டில்லி

ரண்டு விதமான இந்தியாவை மோடி உருவாக்கி உள்ளதாக ராகுல் காந்தி டிவட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. அதை ஒட்டி பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியையும், பிரதமர் மோடியையும் ஒருவருக்கொருவர் நேரடியாக தாக்கிக் கொள்கின்றனர்.

பிரதமரின் முக்கிய கோஷம் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்பதே ஆகும். அதே நேரத்தில் பலர் இந்த கோஷத்துக்கு ஏற்றார்போல் மோடி நடப்பது இல்லை என குறை கூறி வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை என கூறி வருகின்றனர்.

சமீபத்தில் மகாராஷ்டிர விவசாயி ஒருவர் 750 கிலோ வெங்காயத்தை ரூ. 1064 க்கு மட்டுமே விற்க முடிந்ததால் அந்த தொகையை அவர் பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “நமது பிரதமர் மோடி இரு விதமான இந்தியாவை உருவாக்கிஉள்ளார். அதில் ஒன்று அனில் அம்பானிக்காக உருவானது. இந்த இந்தியாவில் விமானமே செய்யாத அவர் ரூ.30000 கோடியில் விமானம் செய்யும் ஒப்பந்தத்தை பெறுகிறார். மற்றொரு இந்தியா ஏழை விவசாயிகளுக்கானது. இங்கு 4 மாதம் உழைத்து 750 கிலோ வெங்காயத்தை உற்பத்தி செய்த விவசாயிக்கு ரூ.1064 மட்டுமே கிடைக்கிறது” என குறிபிட்டுள்ளார்.