ரபேல் ஒப்பந்தம் மோடியின் தன்னிசையான முடிவு : பாஜக முன்னாள் அமைச்சர்கள் புகார்
டில்லி
பிரதமர் மோடி ரபேல் போர் விமான ஒப்பந்தத்தி தன்னிச்சையாக முடிவு செய்ததாக பாஜக முன்னாள் அமைச்சர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய பாஜக அரசு ஒப்பந்தம் இட்டுள்ளது. இந்த விவகார்த்தில் கடும் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். அதை பாஜக அரசு மறுத்துள்ளது. ஆயினும் இந்த விமான விலை குறித்த விவரங்களை வெளியிட தொடர்ந்து அரசு மறுத்து வருகிறது.
எதிர்க்கட்சிகள் இவ்வாறு புகார் தெரிவிக்கும் அதே நேரத்தில் பாஜகவின் முன்னாள் அமைச்ச்ர்களும் இது குறித்து குற்றம் சாட்டி உள்ளனர். பாஜகவின் முன்னாள் அமைச்சர்களான யஷ்வந்த் சின்ஹா மற்றும் அருன்ஷோரி ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இது குறித்து பேசி உள்ளனர்.
செய்தியாளர்கள் சந்திப்பில், “பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் நாட்டின் பாதுகாப்புக்கு 126 விமானங்கள் தேவை என தெரிவித்திருந்தன. அப்படி இருக்க 30 விமானங்கள் வாங்குவதற்கு மட்டுமே ரபேல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இவ்வாறு ராணூவ உபகரணங்கள் வாங்க பல விதிமுறைகள் உள்ளன. ஆனால் மோடி அவை அனைத்தையும் மீறி உள்ளார்.
ஒரு விமானத்தின் விலை ரூ.670 கோடி எனும் போது ரூ.1670 கோடியாக அதை மாற்றும் தன்னிச்சையான முடிவை மோடி எடுத்துள்ளார். இதற்கு காரணம் என்ன? தங்களது ஆதரவு தொழிலதிபர்களுக்காக ஏற்கனவே போடப்பட்ட பராமரிப்பு ஒப்பந்தத்தையும் மாற்றி உள்ளார்.” என மோடி மீது சரமாரியாக குற்றச்சாட்டுகள் சுமத்தி உள்ளனர்.