சாத்வி பிரக்ஞா வேட்பாளரானதற்கு சமாளிப்பு விளக்கம் அளிக்கும் மோடி

போபால்

போபால் தொகுதி பாஜக வேட்பாளராக குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி சாத்வி பிரக்ஞா தாகுர் அறிவிக்கப்பட்டதற்கு மோடி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் வருடம் மாலேகாவ் பகுதியில் நடந்த வெடிகுண்டு வெடிப்பில் ஐந்து பேர் மரணம் அடைந்தனர் மற்றும் 101 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டவர்களில் சாத்வி பிரக்ஞா தாகுரும் ஒரு வர் ஆவார். இவருக்கு நீதிமன்றம் தொடர்ந்த் 8 வருடங்கள் சிறையில் இருந்ததாலும் அவருக்கு மார்பக புற்றுநொய் உள்ளதாலும் ஜாமின் அளித்தது.

காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் போட்டியிடும் போபால் தொகுதியில் பாஜக தனது வேட்பாளராக சாத்வி பிரக்ஞாவை அறிவித்துள்ளது. தீவிரவாத வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவரை பாஜக தனது வேட்பாளராக அறிவித்ததற்காக காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மோடி தனது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசி உள்ளார்.

மோடி, “கடந்த 1984 ஆம் வருடம் இந்திரா காந்தி மறைந்த போது அவருடைய மகன் ‘ஒரு பெரிய மரம் விழும் போது பல உயிரினங்கள் மரணம் அடையும் என தெரிவித்தார். அதைபோல இந்திரா காந்தி மறைவுக்குப் பின் பல சீக்கியர்கள் கொல்லபட்டுள்ளனர். இது ஒரு சிலரால் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கர வாத செயல் இல்லையா? ஆனாலும் மறைந்த பிரதமரின் மகன் (ராஜிவ் காந்தி) பிரதமர் ஆக்கப்பட்டுள்ளார். எனவே நடுஇலை ஊடகங்கள் இப்போது மட்டும் ஏன் கேள்விகள் எழுப்புகின்றன?

கடந்த 1984 ஆம் வருடம் நடந்த சீக்கியர் எதிர்ப்பு கலவரத்தில் பல சட்டப்பேரவை உறுப்பினர்களும் மத்திய அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர் என்பதற்கு நேரில் கண்ட சாட்சிகள் உள்ளன. ஆனால் அவர்களில் ஒருவர் (கமல்நாத்) தற்போது மத்திய பிரதேச முதல்வராக பதவி வழங்கபட்டுள்ளார்.

அவ்வளவு ஏன்? அமேதி தொகுதியிலும் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவரும் ஜாமீனில் உள்ளவர்கள் ஆவார்கள். ஆனால் அவர்கலை யாரும் கேட்டுள்ளனரா? ஆனால் போபால் தொகுதியின் பாஜக வேட்பாளர் ஜாமீனில் உள்ளபோது மட்டும் ஏன் இந்த கூச்சலும் கூப்பாடும் வருகின்றன? ஒரு பெண், ஒரு சன்னியாசினி கொடுமைப்படுத்தப் பட்டபோது ஏதும் கேட்காதவர்கள் இதற்கு மட்டும் எதிர்ப்பது ஏன்?” என கேட்டுள்ளார்.