சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி

டில்லி:

பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

டோக்லாம் எல்லையில் 73 நாட்களாக நீடித்த பிரச்னையால் இந்திய&-சீனா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதை சரி செய்யும் வகையில் மோடிக்கு சீன அதிபர் அழைப்பு விடுத்தார்.

இதை ஏற்ற பிரதமர் மோடி இன்று மாலை சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றார். சீனாவில் வுஹான் நகரில் நடைபெறும் 2 நாள் மாநாட்டில் கலந்துகொள்ளும் மோடி அங்கு சீன அதிபர் ஷி ஜிங்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.