லூதியானா, பஞ்சாப்

ந்தியாவின் பொருளாதார வலிமையை பிரதமர் மோடி அழித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

மக்களவை தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு வரும் ஞாயிறு அன்று நடைபெறுகிறது.   இதை ஒட்டி அந்த தொகுதிகளில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.   காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் செயலர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.

வாரணாசியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி சாலைப் பேரணியில் கலந்துக் கொண்டுள்ளார்.   இந்த பேரணி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தொடங்கி காசி விஸ்வநாதர் கோவிலில் முடிவடைந்தது.   இந்த பேரணியில் பிரியங்கா காந்தி தனது உரையில் உலகெங்கும் சுற்றுப்பயணம் செய்யும் மோடி உள்ளூர் ஏழைகளை சந்திப்பதில்லை என தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பேரணியில் ராகுல் காந்தி, “இந்தியாவின் பொருளாதார வலிமையை பிரதமர் மோடி அழித்து விட்டார்.   தற்போது நாட்டில் மிகப் பெரிய பிரச்னைகளாக வேலை இன்மையும் விவசாயிகளின் ஏழ்மை நிலையும் உள்ளன.

இதற்காக காங்கிரஸ் குறைந்த பட்ச ஊதிய திட்டத்தை அறிவித்துள்ளது.   இந்த திட்டத்தினால் ஏழை மக்கள் மட்டும் பயனடையப் போவது இல்லை.  நடுத்தர மக்களும் பயன் அடைவார்கள்” என தெரிவித்துள்ளார்.