ஆந்திரா விவகாரத்தில் எனது வாக்குறுதியை மோடி பின்பற்றவில்லை….மன்மோகன் சிங்

டில்லி:

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் எனது முடிவை மோடி பின்பற்றவில்லை என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை தெலுங்கு தேசம் கட்சி முடக்கியது. தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ராஜ்யசபாவில் இன்று விவாதம் நடந்தது.

அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில்,‘‘ அருண் ஜெட்லி உட்பட பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்த பிறகே ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று நான் வாக்குறுதி அளித்தேன். எனக்கு பின்னால் பிரதமராக வருபவர்கள் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என எதிர்ப்பார்த்தேன்.’’ என்றார்.